பெண்கள் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றிய இளைஞர் - கோவையில் குடியிருப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் அத்துமீறல்!

கோவை கணபதி அருகே சி.எம்.நகரில் 43 சென்ட் காலியிடத்தில் கட்டுமான பொருட்களை குவித்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையின்போது, பெண்கள் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றியதால் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை காந்திமா நகர் பகுதிக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை சிஎம் நகர் பொதுமக்கள் நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து புகார் அளித்தனர். இந்த நிலையிலே ராஜா ராம் என்பவரது மகன் வெங்கட் நண்பகளுடன் சி.எம் நகர் பகுதிக்கு வந்து இங்குள்ள 43 சென்ட் இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறியுள்ளார்.

இதை அறிந்த சிஎம் நகர் வீட்டு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான அங்கு குவிந்தனர் . இது பற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரு தரப்பினரையும் திங்கட்கிழமை காலை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறிவிட்டு அவர்களை சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் வெங்கட் மற்றும் 15 க்கும் மேற்பட்டோர் பைக்குகள் மற்றும் சரக்கு வாகனங்களில் கட்டுமான பொருட்களுடன் மீண்டும் வந்து கட்டுமான பொருட்களை காலி இடத்தில் வைக்க முயன்றனர். உடனே சிஎம் நகர் பொதுமக்கள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் முன்னிலையில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வெங்கட் அழைத்து வந்திருந்த நண்பர்களில் ஒருவர் பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கிருந்த பெண்கள் மீது மோதினார். இதில் சில பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. சரவணம்பட்டி போலீசார் அங்கு விசாரித்துக் கொண்டிருந்த பொழுது பெண்கள் மீது பைக்கை ஏற்றிய சம்பவத்தால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் ஜிப்பில் ஏற்றினர். பின்னர் பொதுமக்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளிக்குமாறு கூறினர்.

பின்னர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள், பொருளாளர் சண்முகசுந்தரம் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு 10 மணியளவில் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்ற போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பெண்கள் மீது பைக்கை ஏற்றி மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...