கிறித்துவ மதத்தைப் பரப்பும் மிஷினரிகள் செயல் சட்டவிரோதமானது அல்ல..! - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

கிறித்துவ மதத்தைப் பரப்பும் மிஷினரிகளின் செயல்களை சட்டவிரோதமாகப் பார்க்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் மதத்தைப் பரப்பும்போது, அது பொதுஒழுக்கம், சுகாதாரம் மற்றும் அரசியலமைப்பின் 3ம் பகுதியின் விதிகளுக்கு எதிரானது என்றும் பட்சத்தில் அது தீவிரமாக கண்காணிப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.


தமிழகத்தில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கான மூலக் காரணம் குறித்து என்ஐஏ/ சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.



அதில், கிறிஸ்தவ மதத்திற்கு மாணவி மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருவரை வலுக்கட்டாயமாக அல்லது ஏமாற்றி மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார். அப்போது, தமிழக அரசின் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் மிஷனரிகளின் செயல்களை சட்டவிரோதமாக பார்க்க முடியாது. “அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 (மதச் சுதந்திரம்) ஒவ்வொரு குடிமகனுக்கும், தனது மதத்தைப் பரப்புவதற்கான உரிமையை உறுதி செய்கிறது. எனவே, கிறிஸ்தவ மதத்தை பரப்பும் மிஷனரிகளின் செயல்கள் சட்டத்திற்கு எதிரான ஒன்றாக பார்க்க முடியாது.

ஆனால், மதத்தைப் பரப்பும் அவர்களின் செயலால், பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் மற்றும் அரசியலமைப்பின் 3ம் பகுதியின் பிற விதிகளுக்கு எதிரானது என்றால், அது தீவிரமாக கண்காணிப்பட வேண்டும். அச்சுறுத்தல், மூடநம்பிக்கை, வஞ்சம் உள்ளிட்டவைகளின்றி, எந்தவொரு நபருக்கும் தனது நம்பிக்கை முறையைப் பிரச்சாரம் செய்யவும், மற்றவர்களுக்குப் பிரசங்கம் உரிமை உண்டு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர் பி.வில்சன், ஒருவரை மற்றொருவர் தனது சொந்த மதத்திற்கு திருப்ப அடிப்படை உரிமை இல்லை என்று குறிப்பிட்டார். ஆனால், ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தைப் பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு. அதேபோல், எந்த ஒரு நபரும், அவர் விரும்பிய மதத்திற்கு மாறுவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மக்கள் தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளவும், அவர்களின் அசல் மதப் பிரிவுகளுக்குத் திரும்பவும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.

“நாட்டின் குடிமக்கள் தங்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்க சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் அந்தரங்கத்தில் அரசு பேச்சு வார்த்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது” என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்தில் வலுக்கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றியோ மத மாற்ற சம்பவங்கள் எதுவும் நடக்காது எனவும் அரசு திட்டவட்டமாகத் கூறியுள்ளது. ஏழை மக்களை, மிரட்டியோ, வஞ்சகமாகவோ, பரிசுகள் மூலம் கவர்ந்தோ, மூடநம்பிக்கையை ஏற்படுத்தியோ வேறு மதத்திற்கு மாற்றியதாக எந்தக் குற்றச்சாட்டும் பதிவாகவில்லை எனவும் தமிழக அரசின் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...