கோவை அருகே மின் கம்பியில் சிக்கி மயில்கள் பலி - வனத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மின்கம்பியில் சிக்கி 2 மயில்கள் பலியாகின. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இறந்த மயில்களை எடுத்துச் சென்றனர். மயில்கள் இறப்பைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளை நிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகின்றன.

இந்நிலையில், மாநகரின் முக்கிய பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஏராளமான அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ளது.



அதனை சுற்றி காலி இடங்களும் உள்ளன. இங்கு ஏராளமாக மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மின் கம்பிகளில் சிக்கி மயில்கள் பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.



இந்நிலையில், இன்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் சிக்கி இரண்டு மயில்கள் பலியாயின. இது தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த இரண்டு மயில்களையும் எடுத்துச் சென்றனர்.



தேசிய பறவையான மயில்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...