கோவையில் இருந்து மும்பைக்கு நாளை முதல் கூடுதல் விமான சேவை - ஏர் இந்தியா அறிவிப்பு!

கோவையில் இருந்து மும்பைக்கு கூடுதலாக ஒரு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த சேவையானது நாளை முதல் துவங்கப்பட உள்ள நிலையில், காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் காலை 8.20 மணிக்கு கோவை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து மும்பைக்கு நாளை முதல் கூடுதலாக விமானம் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை விமான நிலையத்திற்கு தினமும் 23 உள்ளூர் விமானங்களும், சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவிற்கு செல்லும் இரண்டு சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் 8,750 பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து மும்பைக்கும், மும்பையில் இருந்து கோவைக்கும் கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் கோவையிலிருந்து மும்பைக்கு விமான சேவை துவங்க உள்ளது.

காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து கிளம்பும் ஏர் இந்தியா விமானம் காலை 8.20 மணிக்கு கோவை வந்தடையும், மீண்டும் 9.00 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி 11 மணி அளவில் மும்பை சென்றடையும்.

ஏற்கனவே கோவை மும்பை இடையே இன்டிகோ, விஸ்டாரா என மூன்று விமானங்கள் சேவை இருந்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளது. கோவையிலிருந்து வியாபார ரீதியாகவும், வெளிநாடு மருத்துவத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விமான சேவை துவங்கப்பட உள்ளது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...