கோவை ரேஸ்கோர்ஸில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் - அகற்றும் பணி தீவிரம்!

கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய்கள் நிரம்பிய நிலையில், சாலைகளில் கழிவுநீர் வெளியேறியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கழிவுநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் நேற்று பெய்த கனமழையால் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாக்கடை கால்வாய் நிறைந்து கழிவு நீர் சாலையில் வழிந்தோடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



கோவையில் கடந்த மூன்று நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.



இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நிறைந்து, கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை ஓரத்தில் கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் டேங்கர் லாரிகள் மூலம் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீர் செய்து, தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...