கோவையில் 17 வயது மகளுக்கு 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது!

கோவையில் 2வது திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கணவன் - மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததை தொடர்ந்து, புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் 17 வயது சிறுமிக்கு கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணுக்கும், 2வது கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றுள்ளனர்.

அப்போது அவரது 17 வயது மகள் வளர்ப்பு தந்தை கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்ததோடு, வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வளர்ப்பு தந்தை மீது சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...