நம்ம ஊரு சூப்பரு - கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்!

நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரத்தை மே 1முதல் ஜுன் 15 வரை செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், NCC மற்றும் NSS மாணவர்களை கொண்டு பெரிய அளவிலான துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.


கோவை: நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரத்தை மே 1முதல் ஜுன் 15 வரை செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) பஷீர் அகமது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், கமலகண்ணன், மாவட்ட மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் இதர களப்பணியாளர்களுக்கு பிரச்சாரம் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு வாரியாக குப்பை கொட்டும் இடங்களை அடையாளம் காணும் பணிகளில் பொதுமக்களை ஈடுபடுத்த வேண்டும். தூய்மை காவலர்கள், தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள், NCC மற்றும் NSS மாணவர்களை கொண்டு பெரிய அளவிலான துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வீடுகள், அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்களை அமைக்க ஊக்குவிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை தளங்களை சுற்றிலும் மரக்கன்றுகளை நடவேண்டும். காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட பள்ளிகளில் ஊட்டச்சத்து பூங்கா அமைக்க வேண்டும்.

மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை திறம்பட அப்புறப்படுத்த சுகாதாரமான குப்பை கிடங்குகளை பயன்படுத்த வேண்டும். போதிய இடவசதி இல்லாத அல்லது அதிக அளவில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் உள்ள ஊராட்சிகளில், ஒன்றிய அளவில் கூடுதல் இடங்கள் கண்டறியப்பட வேண்டும்.

ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டபிற பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து மாபெரும் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களிடையே பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

இந்த பிரச்சாரத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...