பாஜக பட்டியலின மாநில பொருளாளர் படுகொலை - கோவையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி பாஜகவின் பட்டியலின அணியின் மாநில பொறுப்பாளர் சங்கர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சென்னையில் பாஜக பட்டியலின அணி நிர்வாகி சங்கர் கொலையை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பாஜக பட்டியலின மாநில பொருளாளர் சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் இதுவரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில் சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாக கோவையிலும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட துணைத் தலைவர் மோகன்ராஜ் குமரன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரித்தி லட்சுமி, மூத்த தலைவர் கனக சபாபதி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், தமிழ்நாடு கொலைக்களமாக மாறி வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாகவும் கூறி திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...