கோவை அருகே கனமழையால் உடைந்த தரைப்பாலம் - வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் மீட்பு!

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால், மஞ்சப்பள்ளம் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைபாலம் உடைந்தது. அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நிலையில், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.



கோவை: கோவையில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்றிரவும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் சுந்தராபுரம், மாச்சம்பாளையம், பிள்ளையார்புரம், மதுக்கரை பகுதியில் பெய்த தொடர் கனமழையால், மதுக்கரை, வேலந்தாவளம் வழியாக கேரளா செல்லும் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால், மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்திற்கு 4 அடிக்கு மேல் வெள்ள நீர் சென்ற நிலையில், தரைபாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.



அப்போது, அவ்வழியாக பணிக்குச் சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய வீரப்பனூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வண்டியுடன் வெள்ள நீரில் சிக்கினார்.



இதையடுத்து ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கயிறு கட்டி 1 மணி நேரத்திற்குமேல் போராடி இளைஞரை மீட்டனர். மேலும் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால் மதுக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...