கோவையில் கடையை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை!

கோவை சாய்பாபா காலனி அருகே கே.கே புதூரை சேர்ந்த அருண்குமார்(45) என்பவர் டிரேடர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையை உடைத்து மர்மநபர்கள் ரூ. 4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.


கோவை: சாய்பாபா காலனி அருகே கடையை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே. புதூர் பெரிய சுப்பன வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(45).

இவர் காட்டூர் வெங்கடசாமி வீதியில் டிரேடர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அருண்குமார் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

நள்ளிரவு இவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அது திசை திரும்பி இருந்தது.

இது அருண்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் கடைக்கு விரைந்து சென்று கடையை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அருண்குமார் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...