கோவை குற்றாலத்தில் அடிப்படை வசதிக்காக 1.3 கோடி ஒதுக்கீடு..! - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்

கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், வால்பாறை ஆகிய இடங்களில் மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொள்கிறார். இதன் ஒருபகுதியாக கோவை குற்றாலத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டு மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை குற்றாலத்தில் அடிப்படை வசதிகளுக்காக ரூ.1.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், வால்பாறை ஆகிய இடங்களில் மூன்று நாட்களுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொள்கிறார்.



அதன்படி கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், சாடிவயல் யானைகள் முகாமை மேம்படுத்த முதலமைச்சர் 8 கோடி ரூபாய் அறிவித்துள்ளார். கோழிக்கமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்துவதற்கும் 5 கோடி ரூபாய், தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த 7 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.



சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இங்கு வந்து கண்டு களிக்கும்படியும், இவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும்படியும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். மேலும் முதுமலை யானைகள் முகாமில் யானை பாகன்களுக்கும் உதவியாளர்களுக்கும், வீடு கட்டுவதற்கு 10 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது.

ஊக்கத் தொகையாக ஒரு லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. யானைகள் இறப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், யானைகள் இறப்பு என்பது இயற்கை. நம்முடைய கணக்கீடு படி ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 80ல் இருந்து 120 யானைகள் நோய் நொடிகளால் இயற்கையாக உயிரிழக்கின்றன. அதுமட்டுமின்றி யானைகள் எங்காவது தவறி விழுந்தால் அந்த அதிர்ச்சியினாலும் உயிரிழக்கக்கூடும்.

மின்சாரம் மற்றும் இதர காரணங்களால் யானைகள் உயிரிழந்தால் அதனை தடுப்பதற்கு மின்சாரத் துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில்களில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவு(AI) கருவிகள் மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து உயிரிழப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத் தாண்டி ஏதேனும் நோய் தாக்குதலுக்கு உட்பட்டு யானைகள் இருந்தால் அதனையும் முடிந்தவரை காப்பாற்ற வனத்துறை மருத்துவர் உள்ளது. வனத்துறை மூலம் எந்த அளவிற்கு யானைகளை பாதுகாக்க முடியுமா அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனத்துறையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையையும் கூடிய விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு வனப்பகுதிகளை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது போன்றவற்றுகாக தனி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம்.

கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதைகளை சீரமைத்து தேவையான கழிப்பறை வசதிகள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு 1.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வனப்பகுதிக்குள் எந்தெந்த சாலைகளை சரி செய்ய முடியுமா அவற்றை சரி செய்வோம், மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...