திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் விபரீத முயற்சி - கணவர் மீது போலீசார் பொய் வழக்குப்போட முயற்சிப்பதாக புகார்

திருப்பூரில் கணவர் மீது பொய்யாக கொலை முயற்சி வழக்குப் போட போலீசார் முயற்சிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செண்டிலா என்ற பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழக்கம்போல பரபரப்பாக இன்று காலை இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், குழந்தைகளுடன் ஒரு பெண் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தார். ஆட்சியர் அலுவலக இரண்டாவது தளத்திற்கு சென்ற அந்த பெண், திடீரென தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.



இதனைப் பார்த்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அந்தப் பெண் பெயர் செண்டிலா (வயது35) என்பதும், திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் வசித்து வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும், தனது கணவர் லட்சுமணன் மீது நல்லூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பொய்யாக போடுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும், கணவர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...