கோவை அருகே காட்டுயானை தாக்கி ஒருவர் பலி - வனத்துறை சார்பில் ரூ.50ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் காட்டுயானை தாக்கி தூமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்துவருகிறது.

குறிப்பாக காட்டு யானைகளின் நடமாட்டம் இங்கு அதிகமாக காணப்படுகிறது. இதனால், மாங்கரையில் இருந்து ஆனைகட்டி மலை பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், தூமனூர் பகுதியை சேர்ந்த ராஜப்பன்(வயது48) என்பவர், சேம்புக்கரை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பூதிமேடு பகுதியில் எதிரில் வந்த காட்டுயானை அவரை துரத்தியதாக தெரிகிறது. இதில், நிலைதடுமாறிய ராஜப்பனை, அந்த காட்டுயானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ராஜப்பன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி, உயிரிழந்த ராஜப்பன் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண தொகையாக 50000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...