கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம் - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

கோவை நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை நிர்மலா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கோவை நிர்மலா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் கல்விக் கடன் பெறுதல், வழிகாட்டுதல் குறித்த அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் பாண்டிய ராஜன், முன்னாள் முன்னோடி வங்கி மேலாளர் வணங்காமுடி, நிர்மலா கல்லூரி முதல்வர் ஜி.எஸ்.மேரி பாபிலோ அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது அனைத்து நிலைகளிலும் வெற்றியாளர்களாக திகழச்செய்யும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக நான் முதல்வன்" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கல்வி, சிந்தனை, மொழி ஆற்றல் மற்றும் பன்முகத் திறமையினை மேம்படச் செய்வதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.



மேலும், கோவை மாவட்டத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது எனவும் சமூகத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கவேண்டும்? எங்கு படிக்க வேண்டும்? அதற்கான திறமைகள் மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக வழங்க வேண்டும்.

இந்த பயிற்சி வகுப்பினை தலைமையாசிரியர்கள் சிறப்பாக பயன்படுத்தி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...