கோனியம்மன் கோவில் தேர் ஊர்வலத்தை முன்னிட்டு இன்று தற்காலிக போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று பிற்பகல் 2 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

1. அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து கூட்செட் ரொடு வழியாக வரும் அனைத்து வாகனங்களும் பெரிய கடை வீதி, வின்சென்ட்ரோடு வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2. பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அல்லது பேரூர் பைபாஸ் சாலையில் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

3. மேட்டுப்பாளையம் சாலை, சுக்கரவார்பேட்டை பூமார்க்கெட் மற்றும் புருக்பாண்டு சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக கூட்செட்ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

4. பொள்ளாச்சி சாலையிலிருந்து திருச்சி மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

5. தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையாராஜபுரம், சொக்கம்புதூர், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ்ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

6. பேரூர் சாலையில் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதூர், பொன்னையாராஜபுரம், தடாகம் சாலை வழியாக காந்திபார்க் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேலும் அன்றைய தினம் லாரிப் போக்குவரத்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நகருக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வரும் சாலையிலுள்ள அனைத்து கடை உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை தேர்வரும் சாலையில் நிறுத்தாமல் மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும். 

பொது மக்களும், வாகன ஓட்டிகளும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...