கோவையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம் - வீடு வீடாக சென்று அதிகாரிகள் ஆய்வு!

கோடை மழை பெய்து வரும் நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6,500 தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவையில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசு புழுக்கள் வளர வாய்ப்புள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 6,500 தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வின்போது நல்ல தண்ணீர் தொட்டிகள், வீட்டில் தேவையற்ற பொருட்களை மழை நீர் படும்படியாக வைத்தல் போன்றவற்றை ஆய்வு செய்து, அதில் அபேட் மருந்து ஊற்றியும், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டது மட்டுமல்லாமல், மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

குடிநீர் தொட்டி மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தாலும் அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தாலும் அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்குக் காரணமாக இருந்தால் அதனைக் கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...