கேழ்வரகு வழங்கும் திட்டம் - மசினகுடி ரேஷன் கடைகளில் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் நேரில் ஆய்வு!

நியாய விலைக்கடைகளில் தமிழக அரசின் கேழ்வரகு வழங்கும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என கேத்தி, உல்லாடா, அதிகரட்டி, வாழைத்தோட்டம், மசினகுடி ஆகிய நியாயவிலை கடைகளில் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கேழ்வரகு வழங்கும் திட்டம் ரேஷன் கடைகளில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில் கேழ்வரகு வழங்கும் திட்டம் ரேஷன் கடைகளில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என அமைச்சர் அர.சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர்.

கேத்தி, உல்லாடா, அதிகரட்டி, வாழைத்தோட்டம், மசினகுடி ஆகிய ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள், ரேஷன் கடைகளுக்கு வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கூறியதாவது, மத்திய அரசு தமிழகத்துக்கு மண்ணெண்ணை அளவை குறைத்து வழங்கி உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடிய மண்ணெண்ணை அளவு குறைந்துள்ளது.

2007-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் மானிய விலையிலும், தரமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மத்திய அரசு மண்ணெண்ணை வழங்குகிறது. அதை தமிழக அரசு மானிய விலையில் மக்களுக்கு வழங்குகிறது.

கூடலூர் பகுதியில் மின்சார விநியோக பிரச்சினை உள்ளதால் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி கூடலூர் பகுதி மக்களுக்கு கூடுதல் மண்ணெண்யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ திராவிட மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் லோகநாதன், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் மிர்ஹாசன் முசாபர் இம்தியாஸ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...