குன்னூர் லேம்ஸ்ராக் காட்சி முனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு!

குன்னூர் லேம்ஸ்ராக் காட்சி முனை பகுதியில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்க இருக்கை அமைப்பது, கழிப்பறை, நடைபாதை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டார்.


நீலகிரி: குன்னூர் லேம்ஸ்ராக் காட்சி முனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், நீலகிரி மாவட்டத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

அழகிய பசுமை நிறைந்த காடுகளையும். சமவெளி பகுதிகளில் ஓடும் ஆறுகளையும் வானுயர்ந்த மலைகளையும் பார்க்கலாம் என்பதால், இங்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குன்னூர் லேம்ஸ்ராக் காட்சி முனை பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்க இருக்கை அமைப்பது, கழிப்பறை, நடைபாதை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது சுற்றுலா துறை அலுவலர் உமா சங்கர், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பர்லியார் ஊராட்சி மன்ற தலைவி சுசீலா மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...