மாசுபடும் நீர்நிலைகளை பாதுகாத்திடுக..! - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவையில் மாசுபடும் நொய்யல் நதி உள்ளிட்ட நீர் நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் இரு தினங்களுக்கு முன்பு நொய்யல் நதியில் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டதால் கழிவு நுரை ததும்ப நொய்யல் நதி காட்சியளித்தது.

இதனையடுத்து சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலரும் நொய்யல் நதியை பாதுகாக்க வேண்டும் எனவும் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், நொய்யல் நதி உட்பட நீர்நிலைகள் மாசுபடுவதை பாதுகாக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தை இன்று நடத்தினர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையிலான விவசாயிகள், மாசுபட்ட நீரை பாட்டிலில் எடுத்து வந்ததோடு,மாசடைந்த நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தக் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.

அதில், நொய்யல் நதி மற்றும் வாய்க்கால்களுக்கு ஆதரவாக உள்ள கிளை வாய்க்கால்களில் உள்ள முற்புதர்களை முறையாக தூர்வார வேண்டும், நீர்நிலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, செய்யப்படும் திட்டங்கள் குறித்தும் தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், நீர் நிலைகளை மாசுபடுத்தும் நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதுடன், தொடர்புடைய நபர்கள் மீதுகிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...