கனிமவளக் கொள்ளையை தடுத்திடுக..! ஜல்லி,மணலுடன் மனு அளித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்

கோவையில் கனிம வளக்கொள்ளையை தடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஜல்லி, மணல் ஆகியவற்றுடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு அதிகப்படியான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் கூறி பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பிலும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.



இந்நிலையில், கனிம வளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையிலான நிர்வாகிகள், கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.



அப்போது, அவர்கள் ஜல்லி மணல் உள்ளிட்ட கனிமங்களையும் எடுத்து வந்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் கனிம வளங்கள் வெட்டி எடுத்து செல்லப்படுவது தொடர்ந்தால், கோவை மக்கள்தான் வருங்காலங்களில் பாதிக்கப்படுவார்கள் எனவும், கனிம வள கொள்ளையால் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு செல்லும் பணம், அரசுக்குக் கிடைத்தால் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வந்துவிடலாம் எனவும், மதுவில் வரும் வருமானத்தைவிட அதிக அளவு வருமானம் கனிம வளத்தில் கிடைக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...