வீட்டுநிலம் ஆக்கிரமிப்பு புகார்- கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளி விபரீத முயற்சி

கோவையில் வீட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த முத்துராஜ் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை:கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ்.

கட்டிட தொழிலாளியான இவருக்கு1.5 சென்ட் நிலத்துடன் கூடிய வீடு உள்ளது. இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபர் தனது வீட்டையும் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளதாக கூறி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார்.

ஆனால் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மனம் உடைந்த முத்துராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவிப்பதற்காக வந்தார்.



இந்நிலையில், அவர் திடீரென தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார்.



இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர்.



பின்னர் இது தொடர்பாக விசாரிப்பதற்காக அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...