சிகரெட் பாக்கெட்டுகள் போல மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை புகைப்படம் வேண்டும் - பாமக கோரிக்கை மனு!

சிகரெட் பாக்கேட்டுகளில் உள்ளது போல மது பாட்டில்களிலும் எச்சரிக்கை புகைப்படம் ஒட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மது பாட்டில்களுடன் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


கோவை: மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை புகைப்படம் ஒட்ட வேண்டும் என கோரி பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.



இந்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு மதுக்கடைகளை அதிகரித்துடன் தானியங்கி மதுவிற்பனை இயந்திரம், திருமண மண்டபங்களில் மதுபானங்கள் அருந்த அனுமதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மக்களுக்கு மது என்னும் விஷத்தை அருந்த ஊக்கப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.



இந்த நிலையில் கோவை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அனு அளிக்கப்பட்டது. கோவை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில், ஏராளமான பாமகவினர் மது பாட்டில்களுடன் வந்து மனுவை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது புகையிலை மற்றும் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படம் இடம் பெற வேண்டுமென்று உத்தரவிட்டார். இதன் காரணமாக புகையிலை மற்றும் சிகரெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

அதேபோல் தற்போது தமிழகத்தில் மதுகுடிப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எச்சரிக்கை புகைப்படத்தை அனைத்து மதுபாட்டில்களிலும் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...