உலக தலசீமியா தினம் - கோவையில் மருத்துவ வசதிகள் கோரி ரோஜா பூக்களுடன் மனு

கோவையில் தலசீமியா தினத்தை முன்னிட்டு தலசீமியா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தக் கோரியும், அவர்களுக்கான ரத்த பரிமாற்றத்திற்கும் உரிய வசதிகளை ஏற்படுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் ரோஜா பூக்களுடன் பரிந்துரை மனு அளிக்கப்பட்டது.


கோவை: தலசீமியா நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ வசதியை ஏற்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவிலான தலசீமியா இன்று கடைபிடிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



இந்நிலையில் தங்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த கூறி இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ரோஜா மலருடன் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ரத்த பரிமாற்றத்திற்கான ஏற்பாடுகளை கோவையில் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.



அதனை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். Iron reducing medicines என கூறப்படும் Desirox, Desferal, Kelfer, Fesasiro போன்ற மருந்துகளை போதுமான அளவில் இருப்பில் வைக்கும் வகையிலும், அவற்றை மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் அந்த மருந்துகள் இருப்பு இருப்பதில்லை என்பதால் தனியார் மருத்துவமனைகளை நாடி செலவு செய்யும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

இதனால், மாவட்ட ஆட்சியர் தங்களது கண்காணிப்பிலேயே இந்த மருந்துகளை கட்டுப்பாட்டில் வைத்து உதவிட வேண்டும். மேலும் ரத்தப் பரிமாற்றத்தின் போது Blood Leukocyte Depletion எனப்படும் சுத்திகரிப்பானையும் மாவட்ட ஆட்சியர் தங்களது நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலசீமியாவுக்காக அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒன்றை உருவாக்க வேண்டும். ரத்த தானம் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...