கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா - காவல் ஆய்வாளர் ஒருமையில் பேசி மிரட்டியதாக புகார்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடப்பிரச்சினை காரணமாக தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பெண் தனலட்சுமி என்பவரை, கோவை பந்தயசாலை காவல் ஆய்வாளர் சாந்தகுமார், ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருமையில் பேசி மிரட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, தேவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது, பக்கத்து இடத்துக்காரர் குட்டையில் இருந்து ஆற்றுக்கு நீர் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால், தனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், ஊர் தலைவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இன்று தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி பெண்ணிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவை முடித்து மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையுடன் சேர்ந்து மனு அளிக்க சென்றார்.

அப்போது நுழைவாயிலில் இருந்து வேகமாக வந்த கோவை பந்தய சாலை காவல் ஆய்வாளர் சாந்தகுமார், அந்தப் பெண்ணிடம் மனுவை வாங்கி பார்த்தார். மனு நியாயமான மனு எனத் தெரிவித்த அவர், "தேவையில்லாம உட்கார்ந்தா ரிமண்ட் பண்ணிப்போடுவேன் ஜாக்கிரதை. உன்ன மாறி ஆயிரம் பொம்பளைகளை பார்த்திருக்கேன் போ" என ஒருமையில் மிரட்டினார்.

இதற்குபின் வந்த மற்றொரு பெண் ஆய்வாளர் மாற்றுத்திறனாளி பெண்ணின் கையை பிடித்து இழுத்ததால அவர் நிலைதடுமாறினார். இந்த நிலையில் மனு கொடுக்க வந்த தம்மை, காவல்துறையினர் மிரட்டுவதாக மாற்றுத்திறனாளி தனலட்சுமி குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...