திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்று எரிச்சல்..! - கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு சாதனையான மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.


கோவை: திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடுளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று திமுக ஆட்சியின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டனர்.



முன்னதாக அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது,

2 ஆண்டு காலத்தில் இந்த வார்டில் மட்டும் 3.5 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் கோவை மாநகர பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 11 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நல திட்டம் வழங்க உள்ளோம்.

திராவிட மாடல் ஆட்சியில் சிலருக்கு சந்தேகம் வருகிறது. ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சல் வருகிறது. பெண்கள் காலை உணவு செய்து பணிக்கு போக வேண்டும். இதனால் காலை உணவு திட்டத்தை முதல்வர் வழங்கி உள்ளார். 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளோம்.

ஐடி நிறுவனம் பெங்களூருவுக்கு சென்று விட கூடாது என கோவைக்கு 9,000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 200 ஏக்கர் நிலப்பரப்பில் டெக் சிட்டி வர உள்ளது. செம்மொழி பூங்கா வர உள்ளது.

2 ஆண்டு சாதனையை தலைப்பு செய்திகளாக சொல்ல வேண்டும் என்றால், அதில் மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் என உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக துவங்கப்பட்டுள்ளது

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...