தமிழகத்தில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்த ஆளுநர் முயற்சிக்கிறார்..! - அமைச்சர் ஏ.வ.வேலு குற்றச்சாட்டு

பெரியார் முதல் தற்போது உள்ள திமுக அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால், ஆளுநர் கொண்டுவர முயல்வது மனுதர்மம். தமிழகத்தின் கருத்து, பண்பாடுக்கு எதிராக ஆளுநர் நடந்து வருகிறார் என்று திருப்பூரில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.



கோவை: திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூர் வடக்கு மாநகர திமுக சார்பில் அண்ணா காலனி பகுதியில் நடைபெற்றது. இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழக அரசு இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக திமுக ஆட்சியில் செய்திருப்பதாக அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, தமிழகத்தில் ஆளுநர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரட்டை ஆட்சி முறையை தற்போது கொண்டு வர முயற்சிப்பதாகவும், திமுக மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும்வரை அதை அனுமதிக்க மாட்டோம் எனவும் தாய் மொழி தமிழ் மற்றும் வர்த்தகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்போது இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் ஆளுநர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரை அழைத்து அவரது கருத்துக்களை திணித்து வருவதாகவும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தின் கருத்து, பண்பாட்டிற்கு எதிரான கருத்தை திணித்து வருவதாகவும், இதன் காரணமாகவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு முரண்பாடு இருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காரணமும் இல்லை என்று கூறினார்.

பெரியார் முதல் தற்போது உள்ள திமுக அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால், ஆளுநர் கொண்டுவர முயல்வது மனுதர்மம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திமுக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...