கோவையில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த ஹோட்டல் உரிமையாளர் - மேயரிடம் வழக்கறிஞர் புகார் மனு!

கோவையில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டுவரும் ஹோட்டலின் உரிமையாளர், பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளை செய்துள்ளதாக மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் அளித்தவர்களை, போலீசார் மற்றும் அரசியல்வாதிகளை வைத்து ஹோட்டல் உரிமையாளர் மிரட்டுவதாக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில், கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர் மாநகராட்சி மேயரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில்‌ வ.உ.சி கிரவுண்ட்‌ அருகில்‌ மாநகராட்சி முதியோர்‌ பூங்காவை ஒட்டி டென்மார்க்‌ என்கிற பெயரில்‌ ஹோட்டல்‌ ஒன்று மாநகராட்சி சொந்தமான கட்டிடத்தில்‌ செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டல்‌ நடந்தும்‌ நபர்‌ பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளை நீண்ட காலமாக செய்துள்ளதாக 21.04.2023 அன்று மாநகராட்சி துணை ஆணையரிடம்‌ புகார்‌ அளித்தேன்‌. அந்தப்‌ புகார்‌ மனுவானது மேல்‌ நடவடிக்கைக்காக மத்திய மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, ஹோட்டல்‌ நடத்தும்‌ நபர் போலீசை வைத்தும்‌ அரசியல்வாதிகளை வைத்தும்‌ எங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது விதமாக செயல்பட்டு வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மத்திய மண்டல அலுவலத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர்தான் காரணம்.

மக்கள்‌ வரிப்பணத்தில்‌ சம்பளம்‌ வாங்கிக்‌ கொண்டு நடுநிலையாக செயல்பட வேண்டிய அதிகாரி, ஒருதலை பட்சமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால்,‌ அதிகாரி மீது துறைரீதியாக கடும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி மீண்டும்‌ ஆக்கிரமிப்பு செய்யாத அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறும்‌, மாநகராட்சி எந்த அளவுக்கு வாடகைக்கு விட்டுள்ளதோ, அந்த இடத்தை மட்டும்‌ அந்த நபர்‌ பயன்படுத்தும்‌ விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...