தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி, இறக்குமதி வரியை குறைத்தால் சவரனுக்கு ரூ.5,000 வரை குறையும்!

தொடர் விலை உயர்வின் காரணமாக தங்க நகை விற்பனை குறைந்துள்ளதால், மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி 15 சதவீதம் வரியை 11 சதவீதமாகவும், 3 சதவீத ஜி.எஸ்.டி வரியை 1.5 சதவீதமாகவும் குறைத்தால், சவரன் விலை ரூ.5,000 வரை உடனடியாக குறையும் என தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தங்கத்திற்கான ஜி.எஸ்.டி மற்றும் இறக்குமதி வரியை குறைத்தால், விலை ரூ.5,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தங்க நகை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 47,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறியதாவது,



கோவை மாவட்டத்தில் நாள் தோறும் 200 கிலோ அளவிலான தங்க நகை விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தொடர் விலை உயர்வின் காரணமாக தினசரி விற்பனையானது தற்போது 80 கிலோவாக உள்ளது.

தற்போது, திருமணம் போன்ற விஷேச நிகழ்ச்சிகளுக்கான சீசனிலும், தங்க நகை விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. தினமும் 4 - 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைகளுக்கு நகைகள் வாங்க வருகின்றனர்.

நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நகைக்கடை உரிமையாளர்கள் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். கோவை கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 10,000 பேர் வேலையை இழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி 15 சதவீதம் வரியை 11 சதவீதமாகவும், 3 சதவீத ஜி.எஸ்.டி வரியை 1.5 சதவீதமாகவும் குறைத்தால், சவரன் விலை ரூ.5,000 வரை உடனடியாக குறையும். தங்க நகை விற்பனையும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...