பொள்ளாச்சி அருகே வேலைக்கு சேர்ந்த முதல் நாளே 8 சவரன் நகை திருட்டு - இளம்பெண்ணுக்கு போலீசார் வலை

பொள்ளாச்சி அருகேயுள்ள பாலகோபாலபுரத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலை கேட்டு வந்த கீர்த்தி என்ற இளம்பெண்ணை வேலைக்குச் சேர்த்த நிலையில், 8 பவுன் நகையுடன் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பொள்ளாச்சி அருகே வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே நகை கடையில் கைவரிசை காட்டிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலகோபாலபுரம் வீதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (27). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு கீர்த்தி (27) என்ற இளம்பெண் வேலை கேட்டு வந்தார்.

அவரிடம் கடையின் உரிமையாளர் அடையாள அட்டை கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அந்த இளம்பெண் நாளை தருவதாக கூறினார்.

இதனையடுத்து இளம் பெண்ணை ஆகாஷ் தனது நகைக்கடையில் வேலைக்குச் சேர்த்தார். இரவு 8 மணியளவில் கீர்த்தி திடீரென மாயமானார். அவரை கடை உரிமையாளர் தேடினார். அப்போது அவர் கடையில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடித் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் ஆகாஷ் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே நகைக்கடையில் 8 பவுன் தங்க செயினை திருடி மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...