கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து  தேரை இழுத்தனர்.

கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோணியம்மன் கோவில் டவுண்ஹால் பகுதி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியோடு துவங்கியது.

பின்னர்  பிப்ரவரி 21ம் தேதி கொடியேற்று விழாவும், பிப்ரவரி 26ம் தேதி திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டு நேற்று திருகல்யாண உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி  நிகழ்ச்சியானது நடைபெற்றது.



இந்த தேரோட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுனன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் இருந்து துவங்கிய தேரோட்ட நிகழ்ச்சியானது ஓப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர்நிலை திடலை அடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

கோனியம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்றும் வழக்கம் போல் இந்த ஆண்டும் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்து இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...