2021- ல் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்! - மேலும் சில குற்றவாளிகளை சந்தேகிப்பதாக மனுத்தாக்கல்!

கோவையில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கும் என்பதால் மேல் விசாரணைக்கு அனுமதி அளிக்ககோரி அரசு தரப்பில் இன்று போக்ஸோ நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த போக்ஸோ சிறப்பு நீதிபதி குலசேகரன் வழக்கு விசாரணையை வரும் ஜூன்11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


கோவை: கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்து தீர்ப்பளித்தார்.

கோவையில் 2021ல் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி 2021ஆண்டு நவம்பர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் மாணவி முதலில் படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்தாக பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, சம்பவம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சுல்தான் மற்றும் மனோராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட மேற்கு அனைத்து மகளிர் போலிசார், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

மாணவி வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் 3 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கும் என்பதால் மேல் விசாரணைக்கு அனுமதி அளிக்க கோரி அரசு தரப்பில் இன்று போக்ஸோ நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த போக்ஸோ சிறப்பு நீதிபதி குலசேகரன் இவ்வழக்கை வரும் ஜூன்11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் இந்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...