கேரளா ஸ்டோரி படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட் வாங்கியது ஏன்..? - பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

கேரளா ஸ்டோரி தவறு என்றால், தமிழ்நாட்டில் அந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட ஏன் ரெட் ஜெயின்ட் மூவி வாங்கினார்கள்? ரெட் ஜெயின்ட் கருத்துரிமைக்காக வாங்கியது என்றால், அமைச்சர் உதயநிதி தனது தந்தையிடம் பேசி வெளியிட்டு இருக்கலாமே என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'.

கடந்த மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு, பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஒரு படத்தை எந்த அரசும் தடை செய்ய முடியாது, அதற்கு நீதிமன்றத்திற்கு மட்டும் தான் உரிமை உள்ளது. மேற்கு வங்கத்தில் நீதிமன்ற அனுமதியுடன் திரையிடப்படுமா என்றால், அதுவும் நடக்கும். அதேபோல் கேரளா ஸ்டாரி படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. ஆனால் அதன் மைய கருத்து உண்மை, அவர்கள் எப்படி எடுத்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

கேரளா ஸ்டோரி தவறு என்றால், தமிழ்நாட்டில் அந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட ஏன் ரெட் ஜெயின்ட் மூவி வாங்கினார்கள்? ரெட் ஜெயின்ட் கருத்துரிமைக்காக வாங்கியது என்றால், அமைச்சர் உதயநிதி தனது தந்தையிடம் பேசி வெளியிட்டு இருக்கலாமே.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...