கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - பாஜகவை முந்துகிறது காங்கிரஸ்..!!

கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 106 தொகுதிகளிலும், பாஜக 82 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகிறது.


224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் இதுவரை இல்லாத வகையில் 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின.

இதைத் தொடர்ந்து, 36 மையங்களில் வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து தொகுதிவாரியாக பதிவாக வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும்கட்சியான பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பின்தங்கியுள்ளன.

காலை 9 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 106 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. பாஜக 82 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருவதால், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வெற்றிபெறும் காங்கிரஸ் வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருவுக்கு விரைந்து வரவேண்டுமென கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...