நான்கு சக்கர வாகனம் வாங்கியதில் மோசடி - போத்தனூர் போலீசில் பாதிக்கப்பட்டவர் புகார்!

கோவை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் நான்கு சக்கர வாகனத்தை வாங்கிவிட்டு, அதற்கான ரூ.6 லட்சம் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த தேனியைச் சேர்ந்த சுரேஷ் மீது போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை மதுக்கரை ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து.

இவரது மகன் ரமேஷ்குமார் (42). இவர் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு தனது நான்கு சக்கர வாகனத்தை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த ராஜா மகன் சுரேஷ் (வயது45) என்பவருக்கு விற்பனை செய்ய ரமேஷ்குமார் பேசியுள்ளார்.

இதையடுத்து ,கோவை வந்த சுரேஷ், எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ரமேஷ் குமாரின் வீட்டிற்கு வந்து ரூ.10 ஆயிரம் மட்டும் முன்பணமாக கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.6 லட்சம் பணத்தை ஏழு நாட்களுக்குள் கொடுப்பதாக கூறிவிட்டு நான்கு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவர் பணத்தை தராமல் இருந்ததோடு, சுரேஷ் செல்போனில் அழைத்தபோதும் அதை எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ், போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...