கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ சுமார்‌ 8,000 சுகாதார, தூய்மை பணியாளர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ மாநகராட்சி மற்றும்‌ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ சுமார்‌ 8000 சுகாதார மற்றும் தூய்மை பணியாளா்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தொடங்கி வைத்தார்.



பின்னர்‌, நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் பேசியதாவது, கோவை‌ மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக மாற்றுவதற்காக தூய்மை பணியாளர்கள்‌ சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்‌. மாநகராட்சி தூய்மை பணியாளர்களின்‌ உடல்நலத்தை கருத்தில்‌ கொண்டு மாநகராட்சி சார்பில் கட்டமில்லா முழு உடல்‌ பரிசோதனை முகாம்‌ ராமகிருஷ்ணா மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்படுகிறது.



இந்த மருத்துவ முகாமில்‌ ரத்த கொதிப்பு, ரத்தத்தில்‌ சர்க்கரையின்‌ அளவு, எக்ஸ்ரே, இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தொடர்‌ சிகிச்சை தேவைப்படும்‌ நபர்களுக்கு தொடா்‌ சிகிச்சையும்‌ கட்டணமில்லாமல்‌ மேற்கொள்ளப்படும்‌. தூய்மை பணியாளர்களின்‌ உடல்நலம்‌ மிகவும்‌ முக்கியமானது.

அவர்கள் உடல்நலமும்‌, சுகாதாரமும்‌ முழுமையாக கிடைத்திட மாநகராட்சி நிர்வாகம்‌ சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த மருத்துவ முகாமில்‌ நாளொன்றுக்கு 25 நபர்கள்‌ வீதம்‌ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மத்திய மண்டலத்தில்‌ பணியாற்றும் 1290 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்‌. இதனை அனைவரும்‌ நல்ல முறையில்‌ பயன்படுத்திப் பயன்பெற வேண்டும்‌.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த சிறப்பு முகாமில்‌ துணை மேயர்‌ வெற்றி செல்வன்‌, பொது சுகாதார குழு தலைவர்‌ மாரிச்செல்வன்‌, மாமன்ற உறுப்பினர்‌ பிரபா ரவீந்திரன்‌, உதவி ஆணையர்‌ மகேஷ் கனகராஜ்‌, ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர்‌ லட்மிநாராயண ரெட்டி, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌, தூய்மை பணியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...