கனிமவள கடத்தலை தடுக்க சிறப்பு குழுக்கள் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மாநில எல்லைகளில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இருந்து கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஆய்வு செய்ய பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.



இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் கடந்த 24.02.2023 முதல் மார்ச் 2023 வரை 1254 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

2022-2023 ஆம் நிதி ஆண்டில் சார்ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரால், சுமார் 33 வாகனங்கள், காவல்துறையின் மூலம் 5 வாகனங்கள், பறக்கும் படையின் மூலம் 1 வாகனம் மற்றும் கனிம வளத்துறையினர் மூலம் 32 வாகனங்கள் என மொத்தம் சுமார் 71 வாகங்கள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர்களால் சுமார் 98 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதிக பாரம் ஏற்றிச் சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் கொண்டு சென்றதற்காக சிறப்பு பறக்கும் படையின் மூலம் 15 வாகனங்கள் மற்றும் கனிம வளத்துறையினர் மூலம் 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும், அதிக பாரம் ஏற்றிச் சென்றதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் 21 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை கண்டறியும் பொருட்டு இதுவரை 12க்கும் மேற்பட்ட குவாரிகள் சர்வே செய்யப்பட்டதில் 8 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு உரிய அபராத நடவடிக்கைக்காக பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல்கள் ஏதும் உள்ளதா என்பதை கண்டறிய எதிர்காலத்தில் சர்வே செய்யப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குவாரி குத்தகைதாரர்கள் தங்களது குவாரியை சுற்றி அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினரால் Differential Global Positioning System-ன் படி ஆய்வு செய்து எல்லை தூண்கள் நடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இதுநாள் வரை 66 குவாரி குத்தகைதாரர்கள் மேற்படி DGPS ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...