கோவையில் என்ஐஏ-வை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மதுரை வழக்கறிஞர்களை கைது செய்த என்ஐஏ-வை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகி நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்கள் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். என்ஐஏ-வின் இச்செயலுக்கு பல்வேறு வழக்கறிஞர், வழக்கறிஞர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் என்ஐஏ-வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இச்செயலை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



வழக்கறிஞர்கள் வழக்காடுவது என்பது அவர்களின் தொழில் கடமை, தொழில்முறை என தெரித்த அவர்கள், வழக்கறிஞர்களை கைது செய்வது என்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

இதில் வழக்கறிஞர்கள் ஜோதி, பாலமுருகன், ராதாகிருஷ்ணன், வெண்மணி, டயானா, தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...