திமுக ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன..! - ஹஜ் கமிட்டியினர் தகவல்

கோவையில் இருந்து ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் கோவையில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஹஜ் கமிட்டியினர் அனைத்து சமுதாயமும் அரவணைத்துச் செல்லும் முதலமைச்சர், திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: கோவையில் இருந்து ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிகளுக்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் கோவையில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது.



கோவையில் இருந்து ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிகளுக்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் கோவையில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது. நாளை நீலகிரி மாவட்டத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் மொத்தம் 225 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து அடுத்த மாதம் ஹாஜிகள் மெக்காவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளதால் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



முகாமில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி, இரத்த பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய திருப்பூர் அல்தாப் கூறியதாவது:

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 4,522 ஹாஜிகள் தமிழகத்திலிருந்து ஹச் செல்ல உள்ளனர். அதில் 222 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தமிழக முதலமைச்சர் தாயன்போடு ஹாஜிகள் அனைவருக்கும் ஹஜ் செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் ஏற்பாடு செய்துள்ளார். ஹஜ்-க்கு செல்லும்போது அவர்களது உடல் நலம் குறித்து கடந்த ஆண்டில் இம்மாதிரியான கெடுபிடிகள் இல்லை.

ஆனால் இம்முறை பல்வேறு பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதுஓ அதன் அடிப்படையில் இன்று கோவையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாளை நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் நடைபெறும். ஹாஜிகளை தங்க வைத்து, உபசரித்து வழி அனுப்பும் பெரும் பணியை தமிழ்நாடு ஸ்டேட் ஹஜ் கமிட்டி தொடர்ந்து செய்து வருகிறது.

அந்த துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிக உற்சாகமாக ஹாஜிகளை வழி அனுப்பும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். நமது முதலமைச்சர் அப்போது இருந்து இன்று வரை சென்னையில் இருந்து ஹாஜிகள் செல்ல வேண்டும் என வாதாடி பெற்று தந்துள்ளார்.

அவர்களுக்கு ஹாஜிகள் சார்பாகவும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பாகவும் நன்றி செலுத்தி கொள்கிறோம். இன்றும் அனைத்து சமுதாயமும் அரவணைத்துச் செல்லும் நமது முதலமைச்சர் ஆட்சிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். அதற்கு மகிழ்வுடன் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த காலத்தில் ஹஜ் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்தது. கடந்த அரசு இது ஒரு நிகழ்வாக கருதியது இல்லை. பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் அதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை. நான்கு ஆண்டுகளாக கண்டுகொள்ளாதவர்கள் இறுதியாக ஒரு மாதத்தில் ஆட்சி முடிய போகிறது என்றதும் நாங்கள் இந்த ஹச் கமிட்டியின் தலைவர் என்று தன்னுடைய பங்குக்கு செயல்பட்டார்கள்.

இந்த ஆட்சி ஏழைகளுடைய ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, எல்லா சமுதாய மக்களையும் அரவணைத்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்ற ஆட்சியாக உள்ளது. எல்லா காலகட்டத்திலும் இஸ்லாமிய சமுதாயம் திமுக பின்னால் நின்றது, சிறு சிறு கட்சிகள் வேறு இடத்திற்கு சென்றது. இதன் காரணமாகத்தான் இஸ்லாமியர்கள் கேட்கும் கோரிக்கை எல்லாம் செய்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் ஹஜ் பயணிகளுக்கான மானியம் பெற்று தருவதில் காலதாமதம் இருந்தது. தற்போது அப்படி இல்லை உடனடியாக மானியம் கிடைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே சென்று செலவு செய்ய ரியால் இதுவரை அரசு தான் கொடுத்து வந்தது. அந்த நிலை மாறி நாமே உள்ளனர் வங்கிகள் மூலமாக பணத்தை மாற்றிக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள மத்திய அரசிடம் வாங்கி கொடுத்துள்ளனர். அது தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...