கோவையில் மாயமான சிறுமி ஶ்ரீநிதி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மீட்பு

கோவை ஒண்டிபுதூரில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமி ஶ்ரீநிதி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இரவு மீட்கப்பட்டு, கோவைக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டில் பெற்றோர் திட்டியதால் சிறுமி, வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் மாயமான 12 வயது சிறுமி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டார்.

கோவை ஒண்டிப்புதூர் திப்பே கவுண்டன் வீதியை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி சசிகலா (38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சசிகலா பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் ஸ்ரீநிதி (12) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஸ்ரீநிதி வீட்டின் அருகே தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்து மாயமாகி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகரன் மகள் மாயமானது குறித்து சசிகலாவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த சசிகலா சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் தேடியும் ஸ்ரீநிதி கிடைக்காத நிலையில், கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமியை இரண்டு தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை சமூக வலைதளங்களில் மூலம் அனுப்பி சிறுமி பார்த்தால் தகவல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை மீட்ட போலீசார் கோவை அழைத்து வருகின்றனர். வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் சிறுமி வெளியேறியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...