பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது - 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி!

பிளஸ்1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும், 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அதிகபட்சமாக கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.



சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடைபெற்றது. இதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது.

இதனை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியான நிலையில், பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் 90.93 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 7,549 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ ஆகிய அரசு தேர்வுத்துறையின் இணையதளங்களில், மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கும், எஸ்எம்எஸ் வாயிலாக மதிப்பெண் விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு பாடங்களில் செண்டம் எனப்படும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதன்படி, தமிழ் பாடத்தில் 9 பேரும், ஆங்கிலம் பாடத்தில் 13 பேரும், இயற்பியல் பாடத்தில் 440 பேரும், வேதியியல் பாடத்தில் 107 பேரும், உயிரியல் பாடத்தில் 65 பேரும், கணிதம் பாடத்தில் 17 பேரும், தாவரவியல் பாடத்தில் 2 பேரும், விலங்கியல் பாடத்தில் 34 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும்,

வணிகவியல் பாடத்தில் 214 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேரும், பொருளியல் பாடத்தில் 40 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 598 பேரும், வணிக கணிதம், புள்ளியியல் பாடத்தில் 132 பேரும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...