கோவையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

கோவை சாந்திமேடு அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கிழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை என்பதால், இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகியுள்ளர். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒராண்டாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது. இதனையறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...