கோவையில் இரவு நேரங்களில் உலா வரும் பைக் திருடர்கள் - அச்சத்தில் பொதுமக்கள்!

விளாங்குறிச்சி ரோடு சேரன் மாநகரில் உள்ள வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: வெள்ளலூர் அருகே வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த அந்தோணிதாஸ் என்பவரது மகன் ஜெபா டானியல் (28). இவர் கோவை விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வளர்ப்பு மீன் கடை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ஜெபாடேனியல் வழக்கம் போல தனியார் வணிக வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, முதல் தளத்தில் உள்ள தன்னுடைய கடைக்குச் சென்றுள்ளார். இரவு முழுவதும் அங்கிருந்த ஜெபடானியல் மறுநாள் மதியம் கீழே வந்து பார்த்தபோது, அவரது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல் கட்டமாக அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.



அப்போது அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் வந்த மூன்று இளைஞர்கள், ஜெபா டானியலின் இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. 

இந்நிலையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...