சரவணம்பட்டியில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் - பரபரப்பு!

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்ற கூலி தொழிலாளியின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், ஆசைத்தம்பி தனியாக இருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, பாதி அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சரவணம்பட்டி அருகே பூட்டிய வீட்டிற்குள் பாதி அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்தவர் ஆசைத்தம்பி. இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், வீட்டின் உள்பக்கமாக தாழிட்டு கொண்டு ஆசைத்தம்பி உறங்கியதாக தெரிகிறது.

இதனிடையே ஆசை தம்பியின் மாமியார் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்காக அழைத்துள்ளார். அழைப்பை எடுக்காததால் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து அழைக்க கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் அருகில் இருப்பவர்கள் வந்து பார்த்த போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், வீட்டின் கதவை உடைத்துள்ளனர். அப்போது, ஆசைத்தம்பியின் உடல் பாதி அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசைதம்பி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...