வால்பாறையில் 3வது நாள் யானைகள் கணக்கெடுப்பு பணி - வனச்சரகர், வன அலுவலர்கள் பங்கேற்பு!

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வனப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், 3வது நாளான இன்று கோவை வால்பாறையில் உள்ள நீர்நிலை பகுதிகளில் உள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


கோவை: யானைகள் குறித்த 3வது நாள் கணக்கெடுக்கும் பணியில் இன்று, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் உடுமலை அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்களில் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனச்சரகர் தலைமையில் வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட குழுவுக்கு 4 பேர் வீதம் 34 குழுக்களாக 136 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் நேரடியாக யானைகளை பார்ப்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று கணக்கிடுவது 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நேரடியாக யானைகளை கண்டு கணக்கிடுவது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.



இதில் இன்று மூன்றாவது நாளாக வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனசரகங்களில் நீர் நிலை பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.



இதில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் நீரார் அணை பகுதியில் யானைகள் நடமாட்டத்தை யானைகள் உள்ளதை கணக்கெடுத்தனர்.



அதேபோல் வால்பாறை வனச்சகர் வெங்கடேஷ் தலைமையில் அக்கா மலை வனப்பகுதிக்குள் நீர்நிலை அருகில் யானைகள் நடமாட்டம் அறிந்து யானைகளின் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட யானை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...