கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கப்பட்டதா..? - என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் தாக்குதலுக்கான சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை (IED) தயாரிக்க 190 கிலோ வெடிமருந்துகளை இ - காமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் மூலம் வாங்கியிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.



கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக ஜமேசா முபின் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் வெடிமருந்துகளை வாங்கியதாக என்.ஐ.ஏ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி, கோவை கோட்டைமேடு கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஜமேசா முபின் என்பவர் ஓட்டிச் சென்ற கார் வெடித்தது. இதில் ஜமேசா முபின் உயிரிழந்தார். இவ்வழக்கில் முபின் உறவினர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவ்வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. 

இந்நிலையில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் முபின் மற்றும் அவரது தாய் வழி உறவினர்களான முகமது அசாருதீன் மற்றும் அப்சர் கான் ஆகியோர் வெடிகுண்டு தயாரிப்பதற்காக அறியப்படாத அளவு கரி, அலுமினிய பவுடர், தீப்பெட்டிகள், பென்சால்டிஹைட் டைமெத்தில் அசெட்டல் ஆகிய ரசாயனங்கள், நான்கு சிலிண்டர்கள் மற்றும் மூன்று டிரம்கள் ஆகியவற்றையும் வாங்கியதாக ஏப்ரல் 20 அன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஐஏ குற்றப்பத்திரிகையின் படி, பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவிலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டதை அடுத்து, முபினும் அவரது உறவினர்களும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐஇடிக்கான மூலப்பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

இ-காமர்ஸ் தளங்களான Amazon, Flipkart மற்றும் ஆன்லைன் உர சப்ளையர் மற்றும் உள்ளூர் டீலர்கள் மூலம் 2 கிலோ முதல் 30 கிலோ வரை சிறிய அளவில் கொள்முதல் செய்து வந்துள்ளனர். ஜமேசா முபின், அசாருதீன் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் மொத்தம் 134 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், 56 கிலோ சல்பர், மூன்று டிரம்கள் மற்றும் நான்கு சிலிண்டர்கள் (இதில் இரண்டு அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது) ஆகியவற்றை வாங்கியுள்ளனர். 

தவிர, அறியப்படாத அளவு கரி, அலுமினியம் தூள், தீப்பெட்டிகள் மற்றும் பென்சால்டிஹைட் டைமெத்தில் அசெட்டல் ஆகியவை உள்நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளன.

அசாருதீனும் அஃப்ஸரும், பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை அமைப்பின் விசாரணையின் போது, தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனம் மூலம், ஐஇடியை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனக் கூறுகளை எடைபோட்டு, கலந்து பேக் செய்திருந்தனர். 

இந்த வழக்கில் முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ், முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா, உமர் ஃபாரூக் மற்றும் சனோபர் அலி ஆகியோர் சதி செய்தவர்கள். குண்டு வெடிப்புக்கு பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் தங்கள் சாதனங்களில் "iShredder" - ஒரு ராணுவ தர பாதுகாப்பு தரவு துண்டாக்கும் கருவியைப் பயன்படுத்தி உள்ளனர். 

தாக்குதலின் போது, ​​முபீனின் வாட்ஸ்அப் காட்சி புகைப்படம், “எனது மரணச் செய்தியை நீங்கள் பெறும்போது. என் தவறுகளை மன்னியுங்கள். என் குறைகளை மறைக்கவும். என்னுடைய ஜனாஸாவில் (இறுதிச் சடங்கில்) கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைகளில் என்னைக் காத்துக் கொள்ளுங்கள்".

முபீனின் சாதனங்களில் இருந்து மூன்று சுய வாக்குமூல வீடியோக்களை என்ஐஏ கண்டுபிடித்ததாக குற்றப்பத்திரிகை மேலும் கூறியுள்ளது. "ஜனநாயக அமைப்பு" மற்றும் "அரசு கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இலக்குகள்" பற்றிய அவரது விமர்சன கருத்துக்களை வெளிப்படுத்திய கையால் எழுதப்பட்ட குறிப்புகளையும் என்.ஐ.ஏ அவரது இல்லத்தில் இருந்து மீட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பான (ஐஎஸ்) அதன் ஊதுகுழலான "வாய்ஸ் ஆஃப் கொராசன்" மூலம் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது, இது தங்கள் மதத்தின் "கௌரவத்தை" நிலைநிறுத்துவதற்கான "பழிவாங்கும்" என்று கூறியது.

நாட்டில் ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், சதி மற்றும் நிதியுதவி போன்ற 40 வழக்குகளில் இதுவரை 175 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 32 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...