கோவையில் சொந்த வீட்டிலேயே 27 சவரன் நகையை திருடிய ஐடி ஊழியர் கைது!

கோவை சாய்பாபா காலனி அருகே வேலாண்டி பாளையம் கிருஷ்ணன் நகரை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் விக்னேஷ் (26). தாய் சாந்தி காசிக்கு சென்ற நிலையில் மகன் விக்னேஷ் 27 சவரன் நகையை திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


கோவை: சாய்பாபா காலனி அருகே சொந்த வீட்டில் தங்க நகை திருடிய ஐடி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சாய்பாபா காலனி அருகே வேலாண்டி பாளையம் கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சாந்தி(50). இவரது மகன் விக்னேஷ் (26). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி அவரது வீட்டில் அலமாரியில் தங்க நகைகளை வாங்கி வைத்திருந்தார்.

சம்பவத்தன்று தாய் சாந்தி காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார். பின்னர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பினார். அப்போது அவரது வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 27 சவரன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகையை அவரது மகன் விக்னேஷ் தான் திருடினார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...