கோவையில் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, முகாம் அலுவலகத்தில் உள்ள பொருட்களை தனியார் டிராவல்ஸ் மூலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார். கோவை நீலாம்பூர் - மதுக்கரை நெடுஞ்சாலையில் சென்ற போது, லாரி ஓட்டுநரை மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துகிருஷ்ணன் (வயது30). சென்னையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஈச்சர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, சமீபத்தில் சென்னைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஈரோட்டில் உள்ள ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்து அவரது பொருட்கள் தனியார் டிராவல்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சனிக்கிழமை அனுப்பியுள்ளார்.

பொருட்களை ஏற்றிக்கொண்டு முத்துகிருஷ்ணன் சேலம் - கொச்சின் சாலையில் கிளம்பியுள்ளார். அப்போது, சனிக்கிழமை நள்ளிரவு கோவை நீலாம்பூர் - மதுக்கரை நெடுஞ்சாலையில், கஞ்சிக்கோணாப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், ஈச்சர் லாரியின் பின் சக்கரம் டயர் பஞ்சர் ஆகியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய ஓட்டுநர் முத்துகிருஷ்ணன், கீழே இறங்கி பார்க்கச் சென்றபோது, மர்ம நபர்கள் மூன்று பேரும் முத்துகிருஷண்னை பிடித்து கையை கயிறால் கட்டிவிட்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் லாரியின் பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, அங்கு வந்த சக வாகன ஓட்டிகள் உதவியுடன் கயிறுகளை கழற்றிய முத்துகிருஷ்ணன், போலீஸ் அவசர எண் 100 க்கு அழைத்து தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போத்தனூர் குற்றப்பலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...