கோவை அண்ணா காய்கறி மார்க்கெட் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு - ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு

கோவை அண்ணா காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும் வகையில், மார்க்கெட்டை எருகிடங்கு பகுதிக்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த வளாகத்தில் சாலை வசதிகள், வாகனங்கள் வந்து செல்வதற்கான வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணி சில தினங்களில் துவங்கப்பட உள்ளதாகவும், எனவே இந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகளும் பணிகள் முடியும் வரை கவுண்டம்பாளையம் அருகே உள்ள எருகிடங்கு மைதானத்தில் தற்காலிக கடைகளை அமைத்துக் கொள்ளும்படி கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.



இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் நோட்டீஸ்க்கு அண்ணா தினசரி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து அண்ணா மார்க்கெட் சங்க தலைவர் சந்திரன் கூறுகையில், எருகிடங்கு மைதானத்தில் கடைகளை அமைத்தால் வியாபாரம் நடைபெறாது எனவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படையும் எனவும் தெரிவித்தார்.



ஏற்கனவே எம்ஜிஆர் மொத்த காய்கறி மண்டியிலும் சில்லறை வியாபாரங்கள் துவங்கிவிட்டதால், அண்ணா தினசரி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தங்களை இந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றினால் தற்போது கிடைக்கும் வருமானமும் இழக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக ஆட்சியரிடம் அளிக்கும் மனு தொடர்பாக, வியாபாரிகளுக்கு ஆதரவாக நிர்வாகம் முடிவு எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாகப் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த நோட்டீசை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...