இணையதள மோசடியில் சிக்கி ஏமாறும் ஐ.டி. ஊழியர்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவை கணபதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான புவனேஸ்வரி (32) என்பவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடிய போது, மோசடி கும்பல் ஒன்று முதலீட்டு ஆசைகாட்டி, ரூ.8.97 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் அதிகளவில் ஏமாறுவது ஐடி ஊழியர்கள் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பகுதி நேர பணி, இணையதளம் மூலம் முதலீடு செய்யலாம் என எண்ணும் பட்டதாரி இளைஞர்களை குறி வைத்து வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் மூலமாக லிங்குகளை அனுப்பும் மோசடி கும்பல் ஆசை வார்த்தை காட்டி பணத்தை பறித்து வருகின்றனர். 

இதில் நன்கு படித்த பட்டதாரி இளைஞர்களே அதிகளவு பாதிக்கப்பட்ட வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கோவை கணபதியை சேர்ந்த புவனேஸ்வரி (32) என்பவர், பகுதி நேர வேலைக்காக புவனேஸ்வரி இணையதளத்தில் தேடியபோது அவரை டெலிகிராம் குழுவில் மர்ம நபர்கள் இணைத்துள்ளனர். 

மேலும் அக்குழுவில் ரூ.2,000 முதலீடு செய்தால் அதற்கான உரிய லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பி புவனேஸ்வரி கடந்த மே 19ஆம் தேதி ரூ.2,000 முதலீடு செய்துள்ளார். அதில் அவருக்கு ரூ.2,800 கிடைத்துள்ளது. அதனை உண்மை என நம்பிய அவர் மேலும் முதலீடு செய்ய முயல்வதை கண்டறிந்த, மோசடி கும்பல் அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர். 

இதனை நம்பி பல தவணைகளாக ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என தொடர்ந்து புவனேஸ்வரி முதலீடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பணத்தை கட்டினால் மட்டுமே கணக்கு திறக்கப்படும் என தெரிவித்தனர். 

இதனையும் நம்பி மீண்டும் புவனேஸ்வரி பணத்தை செலுத்தி உள்ளார். கிட்டத்தட்ட ரூ.8.97 லட்சம் கட்டிய நிலையிலும் அவர் முதலீடு செய்த பணம் திரும்ப வராததால் சந்தேகமடைந்தவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...