கோவையில் போலி முகநூல் கணக்கு மூலமாக மனைவியை இழிவுபடுத்திய நபர் கைது!

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியின் பெயரில் போலி முகநூல் கணக்கினை தொடங்கி, ஆபாச படங்களை பதிவிட்டு மனைவியின் செல்போன் எண்ணை பதிவிட்டு இழிவுபடுத்திய பெண்ணின் கணவரான, சிவகங்கையை சேர்ந்த கண்ணன் (32) என்பவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: போலியான முகநுால் கணக்கு தொடங்கி மனைவியை இழிவுபடுத்திய கணவரை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண், தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், மனைவி மீதான ஆத்திரத்தில் அவரை பழி வாங்க எண்ணிய கணவர், போலியான முகநுால் கணக்கு ஒன்றை தொடங்கினார். அதில், தன் மனைவி, அவரது பெற்றோர் இருக்கும் படத்தை முகப்பு படமாக வைத்துக் கொண்டு, ஆபாசமான வீடியோக்கள் மற்றும் படங்களை பதிவிட்டு வந்துள்ளார். கூடவே, தன் மனைவியின் மொபைல் போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணனிடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 



இதனையடுத்து, இந்த குற்றத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (32) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட, 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், கோவை எஸ்.பி., வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைதளங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், எந்தவித தயக்கமும் இன்றி போலீசாரிடம் புகார் அளிக்க முன் வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...